அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவுக்கு எதிராக நடவடிக்கை?
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்ந்து செயல்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
சட்டத்தை அமுல்படுத்துவதற்காகவே மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளதாக, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பானது, சுயாதீனமான தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பாகும் எனவும், தாம் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படவில்லை எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு அரசாங்கம் அனுமதிக்குமாயின், அது தொடர்பில் கவலை கொள்வதாகவும், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், குறித்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படக்கூடாது எனவும், அவர் கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை