தனியார் தொலைக்காட்சியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் – சாணக்கியன்
தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் R.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
“ஒரு நாடு, இரண்டு சட்டம்” என அவர் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெற்றியீட்டிய வெற்றியாளருக்கு வரவேற்பளிக்கும்
பேரணியொன்று அஹுங்கல்ல பகுதியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வின் வீடியோவை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு, சாணக்கியன் இந்த
விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த பேரணியை தடுத்து நிறுத்துவதற்கு ஏன் பொலிஸார் நீதிமன்ற உத்தரவை
பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணி தொடர்பில் பொலிஸார், சாணக்கியனிடம் வாக்குமூலம்
பெற்றுக்கொண்ட பின்னணியிலேயே அவர் இந்த டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
What an absolute joke ! One country , two laws. Why didn’t the police go to courts to stop this procession ? @ReAdSarath
Please instruct the police to record statements from @hirunews pic.twitter.com/zUddOb4fSJ— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) February 21, 2021
கருத்துக்களேதுமில்லை