க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர்
மார்ச் 1 முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் முடிவுகள் ஜூன் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.
இன்று (22) பத்தரமுல்ல, நெலும் மவத்தையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 622,305 மாணவர்கள், 4,513 பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதவுள்ளனர்.
423,746 பாடசாலை மாணவர்களும், 198,606 தனியார் பரீட்சார்த்திகளும் இவ்வாறு பரீட்சை எழுதவுள்ளனர்.
கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு சிறப்பு பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிபர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிராந்திய சுகாதார அலுவலர்களுடன் கலந்தாலோசித்து மாணவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை