‘கொவிட்தடுப்பூசி – பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவும்!

” பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொது சேவைகளில் உள்ள சிற்றூழியர்களுக்கும்  கோவிட் தடுப்பூசி வழங்களில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் என்ற வரப்பிரசாதத்தில் தடுப்பூசியை பெறுவதை விட, எமது மாவட்ட மக்களோடு சேர்ந்து தடுப்பூசியை பெறுவதே நியாயமானதென கருதுகின்றேன்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

” தற்பொழுது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கோவிட் தடுப்பூசியை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டிருக்கின்றது. தங்களது வயதெல்லை மற்றும் உடல் நிலை என்பவற்றை கருத்திற்கொண்டு பல உறுப்பினர்கள் இவ்வசதியை பயன்படுத்தியுள்ளனர். இதில் எவ்வித தவறும் இருப்பதாக நான் கருதவில்லை.

அதே போல சிலர் தவிர்த்துக்கொண்டும் உள்ளனர். எங்களை பொறுத்தவரை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும், பொது பணியில் உள்ள சிற்றூழியர்களுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்களில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் என்ற வரப்பிரசாதத்தில் தடுப்பூசியை பெறுவதை விட எமது மாவட்ட மக்களோடு சேர்ந்து தடுப்பூசியை பெறுவதே நியாயமானதென கருதுகின்றேன்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.