கொட்டகலை மேபீல்ட் தேயிலை மலையில் சிறுத்தை சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்)

 

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் கொட்டகலை எல பொஜின் தேசிய உணவகத்திற்கு முன்னாள் உள்ள மேபீல்ட் தேயிலை மலையில் சுமார் இரண்டடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்

 

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த  சிறுத்தை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 

இந்த சிறுத்தை விஷ உணவு உட் கொண்டு உயிரிழந்துள்ளதா அல்லது எவரேனும் கொன்றுவிட்டனரா? என்பது தொடர்பாக பத்தனை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன் உடலில் காயங்களும் காணப்படுகின்றது.

 

குறித்த சிறுத்தையின் சடலத்தை நல்லதண்ணி வனஜீவராசிகள் எடுத்து சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்