நீர் வழங்கல் அமைச்சரின் அம்பாறை மாவட்டஆலையடிவேம்பு இணைப்பாளராக கிருத்திகன் நியமிப்பு :நீர் பிரச்சனைக்கு உடனடியான தீர்வு வழங்க நடவடிக்கை !

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களின் அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளராகவும், ஆலையடிவேப்பு பிரதேச செயலகத்திற்குற்பட்ட நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திக்குரிய பிரதிநிதியாக பி.எச் .கிருத்திகன் அவர்கள் அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இதன் போது நீர் வளங்கள்அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களிடம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள நீர் வளங்கள் தொடர்பான பிரச்சினையை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பி.எச் .கிருத்திகன் அவர்கள் இது தொடர்பாக விரைவில்
நீர் பிரச்சனைக்கு உடனடியான தீர்வு வழங்குவதாக அமைச்சர் உறுதியளித்தார் .

சமுக சேவைகளில் முன்னின்று செயலாற்றும் இவர் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் பியசேனவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்