ஏப்ரல் 21 தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இன்று(25) கையளிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணைப்பாளர் சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

பின்னர், அமைச்சரவையில் நேற்று முன்தினம் அறிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று முற்பகல் குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்