கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்கள் அடுத்தவாரமே வெளியாகும் -அசேல குணவர்த்தன
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் அடுத்த வாரம் வெளியாகும் என தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.
நிபுணர்கள் குழு தற்போது அவசியமான வழிகாட்டுதல்களை உருவாக்கி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நான் உங்களை விதிமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன் தற்போது உடல்களை தகனம் செய்யும் நடைமுறையே பின்பற்றப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை