அம்பாறை -காரைதீவு பகுதி பிரதான வீதி இருவழி பாதையாக மாற்றம்

(பாறுக் ஷிஹான்)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை  அக்கரைப்பற்று ஏ4 நெடுஞ்சாலை பகுதியில் உள்ள  காரைதீவு பிரதான வீதி இருவழிப் பாதையாக தற்போது  மாற்றப்பட்டு வருகிறது.

காரைதீவு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள பிரதான வீதி  முதற்கட்டமாக இருவழிப் பாதையாக மாற்றப்படவுள்ளது

இப்பிரதேசத்தில் அதிகரித்துள்ள விபத்துக்கள், வாகனங்கள் ,போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முகமாகவும் பாதசாரிகளின் நலன் கருதி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே இப்பகுதியினூடாக பயணம் செய்பவர்களை மிக அவதானத்துடன் செல்லுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை பாதாதை மூலமாக அறிவுறுத்தியுள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்