பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் – சிலோன் தோட்ட அதிகாரிகளின் சங்கம்

(க.கிஷாந்தன்)

தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்தும் தாக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிலோன் தோட்ட அதிகாரிகளின் சங்கம்  எச்சரிக்கின்றது.

சாமிமலை, ஓல்டன் மற்றும் ஏனைய பகுதிகளில் தோட்ட அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து (03.03.2021) தோட்ட அதிகாரிகள் அட்டன் மல்லியப்பூ சந்தியில் கறுப்பு பட்டி அணிந்து கறுப்பு கொடி பிடித்து பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு சுமார் 300 இற்கும் மேற்பட்டோர் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து அவர்களின் கூட்டமும் ஊடக சந்திப்பும் டிக்கோயா தரவலை டி.எம்.சி.சி விளையாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அதன் தலைவர் தயால் குமாரகே கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக தோட்டத்துறைகளில் பணிபுரியும் எமது ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதில் குறிப்பாக மிக அண்மையில் நடைபெற்ற ஓல்டன் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் மிகவும் மிளேச்சத்தனமாக தாக்கப்பட்டனர். இதனை நாங்கள் தொடர்ந்து பொருத்துக்கொண்டு இருக்க முடியாது.

நாங்கள் தோட்டங்களை பாதுகாத்து அதில் பணிபுரிவதற்கே வந்திருக்கிறோம். அதில் ஆகவே எங்களை அவர்கள் தாக்குவதனை அனுமதிக்க முடியாது அவ்வாறு தொடர்ந்து நடைபெற்றால் பாரிய பிரிச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். நாங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தால் தோட்டங்கள் இயங்காது நாட்டின் பொருளாதாரம் தான் பாதிக்கப்படும். கடந்த கொரோனா காலத்தில் கூட தோட்டத்துறை மாத்திரம் தான் இந்த நாட்டிக்கு வருமானத்தினை தேடி கொடுத்தது ஆகவே அரசாங்கம் எங்களுடை பிரச்சினைகள் தொடர்பாக இதை விட கரிசனையுடன் நடந்து கொள்ளவேண்டும்.

இதற்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதில்லை தொழிலாளர்களும் நிர்வாகமும் மிக ஒற்றுமையாகத்தான் இருந்தன ஆகவே இதற்கு பின்னணியில் தொழிற்சங்கங்கம் மற்றும் சக்தியும் செயப்படுவதாகவே நாங்கள் கருதுகிறோம். எங்களுக்கு தொழிலாளர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனை பேசித்தீர்த்து கொள்வதற்கு எத்தனையோ வழியிருக்கிறது.

அவ்வாறு இல்லாது வன்முறைகளில் ஈடுபட்டால் இந்த நாட்டின் பொருளாதாரமும் அவர்களின் பொருதாரமும் தான் பாதிக்கும்.கடந்த காலங்களில் கொழும்புக்கு தேயிலை கொண்டு சென்ற லொறி ஒன்றினை அட்டன் பகுதியில் ஒரு பிரதேசபை தலைவர் ஒருவர் திருப்பி அனுப்பி வைத்தார். இதன் நஸ்ட்டத்தினை யார் கொடுப்பது ஆகவே எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்ப்பதற்கே நான் முயற்சிகின்றோம். ஆகவே தொழிற்சங்கங்களும் இதனை உணர்ந்து செயப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார். அத்தோடு, நாங்கள் துப்பாக்கி கேட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. நாங்கள் துப்பாக்கி கேட்கவில்லை. எங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டோம். 150 ஆண்டுகளுக்கு மேலாக தோட்டங்கள் காணப்படுகின்றது. சில தோட்டங்களில் துப்பாக்கிகள் இருக்கின்றது. அது சம்மந்தமாக எங்களுக்கு பயிற்சிகள் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அது வேறு கதை. நாங்கள் ஆயுதம் எதுவும் கேட்கவில்லை. எங்களுடைய பாதுகாப்பை உறுத்திப்படுத்த  வேண்டும் என்று தான் கேட்கின்றோம்.

இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தனர்.குறித்த கலந்துறையாடலுக்கு தோட்ட முகாமையாளர்கள் உதவி முகாமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.