நிந்தவூரில் பெட்மிடன் சுற்றுப்போட்டி !

(நூருல் ஹுதா உமர்,எம்.என்.எம். அப்ராஸ்)

நிந்தவூர் பெட்மிடன் சம்மேளனத்தினுடைய ஒழுங்கமைப்பின் கீழ் எச்.எம்.வை.எல் அமைப்பின் பிரதான அனுசரனையுடன் நடத்தப்பட்ட பெட்மிடன் சுற்றுப்போட்டித்தொடரின்  இறுதிநாள் நிகழ்வுகள் நிந்தவூர் பெட்மிடன் உள்ளக அரங்கில்  இடம்பெற்றது.இச் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் உசாமா, ஹிசாம் மற்றும் ஜிஸ்லி, பயாஸ் ஆகியோர் மோதினர். சுவாரஸ்யமான முறையில் இடம்பெற்ற இவ் இறுதிப்போட்டியில் 2:0 எனும் அடிப்படையில் உசாமா மற்றும் ஹிசாம் ஆகியோர் வெற்றி பெற்று சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டனர். ஜிஸ்லி மற்றும் பயாஸ் ஆகியோர் இரண்டாம் நிலை வெற்றியாளர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமும் விசேட அதிதிகளாக முன்னாள்  கிழக்கு மாகாண சபை  உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் மற்றும் கல்முனை பிராந்திய பிரதான மின் பொறியியலாளர் முகம்மத் ஹைகல் உட்பட இன்னும் பல முக்கிய அதிதிகளும் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்