கருப்பு ஞாயிறு’ அனுஸ்டிப்புக்கு மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களும் பங்கேற்பு

(க.கிஷாந்தன்)

இலங்கையில் 2019 ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற மிகவும் கொடூரமான தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் நேரடி தொடர்புடைய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வலியுறுத்தி கத்தோலிக்க சபை அறிவித்துள்ள ‘கருப்பு ஞாயிறு’ அனுஸ்டிப்புக்கு மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களும் பங்கேற்றுள்ளனர்.

அந்தவகையில் அட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் (07) இன்று பங்கு தந்தை நியூமன் பீரிஸ் தலைமையில் விசேட திருப்பலியும் நடைபெற்றது. இதில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறிப்பிட்டளவான கத்தோலிக்க மக்கள் கறுப்பு உடைகளை அணிந்து கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தார்கள்.

மேலும், மலையகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் இதற்கு ஆதரவு வழங்கியிருந்தமையும் குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.