மாகாண ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு கடமை இருக்கிறது-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்

மாகாண ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு கடமை இருக்கிறது. அதனை அந்நாடு செய்யும் என எதிர்பார்க்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம்- பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையில் நடைபெறும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை  சீனித்தம்பி யோகேஸ்வரனும் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சீனித்தம்பி யோகேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “மாகாண ஆட்சி முறைமை தேவையில்லை என  சில கட்டத்தில் சிந்திக்கின்றார்கள்.

மத்திய அரசின் ஆட்சி முறைமை இருக்கட்டும். பிரதேச சபை, மாநகர சபை, நகர சபையினை பலப்படுத்தி விடுவோம் என நினைக்கின்றார்கள்.

ஆகவே இந்த அதிகாரங்களை பறிப்பதற்காகதான் பொலிஸ், இராணுவ அதிகாரங்களை கொண்டு வருகிறார்கள். ஆனாலும் இது செல்லுபடி ஏற்றதாக மாறும். ஏனெனில் இந்த மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அதில் நாங்கள் மிக அவசியமாக இருக்கின்றோம்.

இது சர்வதேச ரீதியாக தீர்க்கப்பட்ட விடயம். இது தனி ஒரு நாட்டின் ஒப்பந்தம் அல்ல, சர்வதேச ஒப்பந்தமாகும். இந்தியாவும் இலங்கையும் செய்த கொண்டதுதான் இந்த ஒப்பந்தம்.

இந்த மாகாண ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு கடமை இருக்கிறது. மாகாண ஆட்சி முறைமையை கொண்டு வருவதோடு மாத்திரமல்லாது காணி அதிகாரம், நிதி அதிகாரம், பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை.

அதனை இந்தியா செய்யும் என எதிர்பார்க்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.