திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் முதற்தடவையாக காளான் அறுவடை

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காயத்திரி கிராமத்தில் முதற்தடவையாக இரு இளைஞர்களால் உற்பத்தி செய்யப்பட்ட காளான் அறுவடை இடம்பெற்றுள்ளது.

தம்பிலுவில் விவசாய விரிவாக்கல் பிரிவின் விவசாய போதனாசிரியர் எஸ்.பிரேம்நாத் தலைமையில் நேற்று (09)  நடைபெற்ற நிகழ்வில் விவசாய விரிவாக்கல் நிலைய உத்தியோகத்தர்களால் காளான் உற்பத்தி தொடர்பாக இளைஞர் யுவதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அறுவடை செய்யப்பட்ட காளான்களைக் கொண்டு காளான் கறி மற்றும் காளான் சூப்பு போன்ற உணவுப் வகைகள் சுவையாக தயாரிக்கும் முறைகள் பற்றி பாடவிதான உத்தியோத்தர் திருமதி எஸ்.விஜிதா சமைத்து காட்சிப்படுத்தி இருந்தார்.

காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த வி.ஹரிஸ்குமார் வி.அனுஜன் ஆகியோர் காளான் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிகழ்வில் தம்பிலுவில் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் உதவிப் விவசாயப் பணிப்பாளர் எஸ்.தேவராணி, நிலையப் பொறுப்பதிகாரி என்.சுந்தரமூர்த்தி ,பாடவிதான உத்தியோகத்தர்களான எம்.ஜ.சீஜாத் எஸ்.விஜிதா ,விவசாய தொழிநுட்ப உத்தியோகத்தர் எஸ்.சயரூபன் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரிதிநிதிகள் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.