வவுனியா வைத்தியசாலையில் பிறந்த குழந்தையின் மரணத்தில் சந்தேகம்: தாயின் முறைப்பாட்டையடுத்து வழக்கு விசாரணை!

வவுனியா  பொதுவைத்தியசாலையில் கடந்த 14.12.2020 அன்று மரணித்த குழந்தை தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் நேற்று (10.03.2021) அழைக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 07.07.2021 திகதிக்கு திகதியிடப்பட்டது.

குறித்த குழந்தை கடந்த 14.12.2020 அன்று நண்பகல் 12 மணியளவில் பிறந்து அதே தினம் மலை 4.45 மணியளவில் மரணித்திருந்தது. குழந்தையின் தாய்க்கு சத்திர சிகிச்சையின் மூலமே குழந்தையை பிரசவிக்க முடியும் என மகப்பேற்று வைத்தியர் கூறிய நிலையில் வைத்தியசாலையில் இருந்த வைத்தியர்களால் சாதாரண பிரசவத்தின் மூலம் குழந்தையை பிரசவிக்க முயன்றுள்ளதாக தாய் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

ஏழு மணி நேரத்தின் பின்னர் பிறந்த குழந்தை சில மணி நேரத்திலேயே இறந்து விட்டது.  தனக்கு சத்திர சிகிச்சை மூலமே குழந்தை பிரசவிக்கப்பட வேண்டும் என மகப்பேற்று வைத்தியர் பரிந்துரைத்திருந்ததாக சம்பவதினமான அன்று வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியரிடம் தான்ன் தெரிவித்த போதும், அவர் அதனை கண்டுகொள்ளவில்லை என தாய் தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களின் அலட்சியத்தாலேயே தனது குழந்தை மரணித்தது என பெற்றோர்கள் சந்தேகித்த காரணத்தால் பெற்றோரின் வேண்டுதலின் பேரில் கடந்த 16.12.2020 அன்று  குழந்தையின் உடல் சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மரணபரிசோதனை அறிக்கையில் கநவயட னளைவசநளள கழடடழறiபெ ழடிளவசரஉவநன டயடிழச னரந வழ உடiniஉயடடல னயைபழெளநன ளாழரடனநச னலளவழஉயை காரணமாக பிள்ளைக்கு மரணம் ஏற்ப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் வழக்கு தொடர்பான விசாரணைகள் வவுனியா நீதிமன்றில் நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், வழக்கு எதிர்வரும் 07.07.2021 திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளதாக குழந்தையின் தாயார் தெரிவித்துள்ளார்.

மேலும் குழந்தையின் பெற்றோரால் குழந்தையின் மரணம் குறித்து வடமாகாண ஆளுநர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்