மண்முனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 11 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்… த.தே.கூ இன் உபதவிசாளரும் ஆதரவு…

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் புதிய தவிசாளராக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மண்முனை பிரதேச சபையில் 2021ம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் தவிசாளர் த.தயானந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதேச சபையின் உபதவிசாளார் மா.சுந்தரலிங்கம் உட்பட உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற இடம்பெற்ற பாதீட்டு அமர்வின் போது முன்னாள் தவிசாளர் மகேந்திரலிங்கம் அவர்களால் முன்வைக்கப்பட்ட பாதீட்டு அறிக்கை தோல்வியடைந்ததையடுத்து கடந்த மாதம் சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு செய்யப்பட்டார். புதிய தவிசாளரினால் முதலாவது பாதீடாக இது முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன் போது தவிசாளரினால் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. பல உறுப்பினர்கள் பாதீட்டில் உள்ள குறை, நிறைகள் பற்றிக் கருத்துத் தெரிவித்தனர். இறுதியில் வாக்கெடுப்பின் மூலம் பாதிட்டினை நிறைவு செய்வது தொடர்பில் உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாதீடு நிறைவேற்றத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதன்போது பாதீட்டுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி, சுயேட்சைக் குழு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதித் தவிசாளர் உட்பட 11 பேர் வாக்களித்தனர். பாதீட்டுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 05 உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் தவிசாளருடன் சேர்ந்து 06 பேர் வாக்களித்தனர்.

இதன்படி மேலதிக 05 பெரும்பான்மை வாக்குகளால் புதிய தவிசாளரின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.