“பண்டாரம்-வன்னியனார்” வரலாற்று நூல்வெளியீடு!!

வரலாற்றாய்வாளர் அருணாசெல்லத்துரையின் “பண்டாரம்-வன்னியனார்” வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டுவிழா நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

ஜனாதிபதிசட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாழ்த்துரையை தேசிய கல்வியற்கல்லூரியின் ஓய்வுநிலை பீடாதிபதி க. சுவர்ணரயா நிகழ்த்தினார்.

அதனைத்தொடர்ந்து நூல்வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலை சட்டத்தரணி சிற்றம்பலம் வெளியிட்டுவைக்க அதன் முதற்பிரதியை வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் வீ.ஜெகசோதிநாதன் பெற்றுக்கொண்டார்.

நூலிற்கான மதிப்பீட்டுரையை புளியங்குளம் ஆசிரியர் வாண்மைவிருத்தி நிலையத்தின் முகாமையாளர் சு,ஜெயச்சந்திரன் நிகழ்த்தியதுடன்,பதிலுரையை நூல் ஆசிரியரும்,நன்றியுரையை மருத்துவர் செ.மதுரகனும் நிகழ்த்தியிருந்தனர்.

ஆய்வாளர் அருணாசெல்லத்துரையின் வன்னிமண்சார்ந்த வரலாற்றாய்வு நூல்களில் இது 9நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.