இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருக்கோவில் பிரதேசக் கிளை நிருவாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்

(டினேஸ்)
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருக்கோவில் பிரதேசக் கிளை நிருவாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் பிரதேசக் கிளையின் தலைவர் கலாநேசன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் உட்பட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருக்கோவில் பிரதேசக் கிளை நிருவாக உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தேர்தலின் போதும், தேர்தலின் பின்னரும் கட்சியின் செயற்பாடுகள், கட்சியின் பின்னடைவு, ஏற்பட்ட பின்னடைவினை நிவர்த்தித்தல், வட்டாரக் கிளைகள் மற்றும் பிரதேசக் கிளை புனரமைப்பு, இளைஞர்களை உள்ளீர்த்தல், பிரதேசத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள், பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீடு போன்ற பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்