கொழும்பு -கிராண்ட்பாஸ் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து

கொழும்பு -கிராண்ட்பாஸ், காஜிமா வத்தையின் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 – 50 வீடுகள் சேதமடைந்துள்ளன.

சுமார் 250 தொடர் வீடுகள் இப் பகுதியில் அமைந்துள்ளதுடன், இந்த தீ விபத்தானது இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தையடுத்து, அதனை கட்டுப்படுத்த ஆறு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.

தீ விபத்தினால் எந்தவொரு உயிர் சேதங்களும் ஏற்படப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்