தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு !

-நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்-
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பால்நிலை சமத்துவத்திற்கும் சமநிலைக்குமான நிலையம் ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் பால்நிலை சமத்துவத்திற்கும் சமநிலைக்குமான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி முஹம்மத் மஜீத் மஸ்றூபா தலைமையில் இன்று (16) செவ்வாய்க்கிழமை காலை கலை,கலாச்சார பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இரு அமர்வுகளாக இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் முதன்மைப்  பேச்சாளராக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதியும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல். அப்துல் அஸீஸ்  ”பெண்களை வலுவூட்டுதல் – பூகோளப் பார்வையும் தேசிய மேம்பாடும்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.

இந்நிகழ்வின் இரண்டாவது அமர்வு ஏ.எல். அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் “பெண்களை வலுவூட்டுதல் – கருத்தாடலுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியினை மனதில் கொள்ளுதல்” எனும் கருப்பொருளிலான சிறப்புக் கலந்துரையாடல் இடம் பெற்றது.  இக்கலந்துரையாடலில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் (பீடாதிபதி – அறபு மொழி, இஸ்லாமிய கற்கைகள் பீடம்), கலாநிதி எம்.ஐ. சபீனா (முன்னாள் பீடாதிபதி – பிரயோக விஞ்ஞானங்கள் பீடம்), கலாநிதி எம்.எம். பாஸில் (தலைவர் – அரசியல் விஞ்ஞானத் துறை), கலாநிதி  அனூசியா சேனாதிராஜா (தலைவர் – சமூக விஞ்ஞானங்கள் துறை) ஆகியோர் பங்குபற்றினர்

இந்நிகழ்வில் பேராசிரியர்கள், கலாநிதிகள், பிரதேச செயலாளர், பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களும் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளும், மகளிர் சங்கங்களினது உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.