கிளிநொச்சி-வட்டக்கட்சி கல்மடுநகர் பகுதியில் உள்ள பாலத்தை புனரமைப்பு செய்வதற்கான பணி ஆரம்பம்!

கிளிநொச்சி வட்டக்கட்சி கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பின் வயல் வீதியின் பாலம் புனரைப்புச் செய்வதற்கான பணியை கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான  டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம ஆதியாக கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி ஆரம்பித்துவைத்தார்.

கல்மடுநகர் பாலத்தை கட்டித்தருமாறு  கல்மடுநகர் மக்களின் நீண்ட நாட்கள் கனவை நிறைவேற்றி வைத்த கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் அமைச்சரருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் கல்மடுநகர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்  இன்று (புதன்கிழமை) குறித்த பாலத்தைக் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் குரூஸ் கிளிநொச்சி மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசியபையின் அதிகரிகள் மற்றும் கிராமமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்