இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேற்ற பட்டது. இலங்கைக்கு ஆதரவாக 11 நாடுகள் ; எதிராக 22 நாடுகள் வாக்களிப்பு.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன.

அத்துடன் 14 நாடுகள் வாக்களிப்பில் களந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கெடுப்பு நேற்று எடுக்கப்படவிருந்த போதும் சில திட்டமிடல் சிக்கல்களைத் தொடர்ந்து இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய வாக்கெடுப்புடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வு நிறைவுப் பெறவுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்