அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு கடினபந்து  விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

(எம். என்.எம்.அப்ராஸ்)

இளைஞர் யுவதிகளின்  மத்தியில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தம் முகமாக  நடளாவிய  ரீதியாக அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது

இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்  வகையில்,

 விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்   நாமல் ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலில்,அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு கடின பந்து  கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும்  நிகழ்வு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தகரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினர் றிஸ்லி முஸ்தபாவின்  ஏற்பாட்டில் சாய்ந்தமருது அல் -ஹிலால் வித்தியாலயத்தில் (02) வெள்ளிக்கிழமை  பிற்பகல்  இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அதிதிகளாக  ,
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்சவின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி சிபான் மஹ்ரூப், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றொனி இப்ராஹீம் மற்றும் அமைச்சரின் கிரிக்கெட் விவகார இணைப்பாளர்  ஜெனரல் டனீஸ் டயஸ் ஆகியோர் கலந்து கொண்டதுடன், மற்றும் றிஸ்லி முஸ்தபாவின்  செயலாளர் ஏ.எல். ஜவாஹிர் ,இளைஞர் பாரளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.ரிஹான், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள்  ஆகியோர் இதன் போது கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்