கனடா மொன்றியல் புறுட் கபே அமைப்பினால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உதவி

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் தனிமைப்படுத்தப்பட்ட 100 குடும்பங்கள் மற்றும்

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 28 குடும்பங்களுக்கு கனடா நாட்டின் மொன்றியல்புறுட் கபே அமைப்பினால் உலருணவுப்பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த உலருணவுப் பொருட்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் நல்லூர் பிரதேசத்தின் தலைவர் வினோதன் உள்ளிட்ட இளையோரிடம் வழங்கப்பட்டன.
வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
மொன்றியல் நாட்டிலே புறுட் கபே என்ற ஸ்தாபனத்தின் நடத்தி வருகின்ற அதன் உரிமையாளரான சிறி என அழைக்கப்படும் சின்னத்துரை சண்முகலிங்கம் கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி இருக்கின்றார் குறிப்பாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அதனை விட பல்வேறுபட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பெரும் தொகையான உதவிகளை வழங்கி இருக்கின்றார் அண்மையில் இரணைதீவு பகுதியில் உள்ள மக்களுக்கு உரிய உணவுப் பொருட்களை பங்குதந்தை ஊடாக அவர் வழங்கியிருக்கிந்தார் அதுமட்டுமின்றி போரினால் பாதிக்கப்பட்ட12 முன்னாள் போராளிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான உதவிகளையும் வழங்கி இருக்கின்றார் இதனைவிட பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்து இருக்கின்றார் எனவும் குறிப்பிட்டார் .
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் ஆசிரியர் ஹரி சங்கர் அவர்களும் கலந்து கொண்டார்.
பிரமந்தனாறுப் பகுதிக்கான உலருணவுப் பொதிகளை கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் கலைவாணி அவர்களால் வழங்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.