இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம்

மறைந்த மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அவரது திருவுடல் தற்போது மன்னார் புனித செபஸ்தியார் போராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரின் திருவுடல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்று பிற்பகல் 2 மணி வரையில் அவரது திருவுடல் அங்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டு 3 மணியளவில் இலங்கையில் உள்ள மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன், ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

நீண்ட காலமாக சுகயீனமுற்று யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர் மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர், தமது 80வது வயதில் கடந்த முதலாம் திகதி காலமானமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.