அக்கரைப்பற்று பதுர் பூம் போய்ஸ் இளைஞர் கழகம் மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவு.

[நூருல் ஹுதா உமர்]

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 33 வது தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியினை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.எம். ஸமீலுல் இலாஹி தலைமையில் அக்கரைப்பற்று அதாவுல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதற்கமைய இறுதிப் போட்டிக்கு கிங் வோரியஸ் இளைஞர் கழகமும் பதுர் போய்ஸ் இளைஞர் கழகமும் தகுதி பெற்றன. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பதுர் பூம் இளைஞர் கழகம் 05 ஓவர் நிறைவில் 04 விக்கட்டுக்களை இழந்து 46 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிங் வோரியஸ் இளைஞர் கழகம் 05 ஓவர் முடிவில் 04 விக்கட்டுக்களை இழந்து 35 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இவ்வெற்றியை அடுத்து பதுர் பூம் போய்ஸ் இளைஞர் கழகம் மாவட்ட மட்ட போட்டிக்கு தகுதி பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்