ரமழான் தலைப்பிறை: பார்க்கும் மாநாடு இன்று

புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, இன்று(12) திங்கட்கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறுமென பிறைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம்இ வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் பிறைக்குழு அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்