உலகத்தில் தமிழ் அழியாமல் பாதுகாக்கப்படும் என உரைத்த உத்தமனை இழந்தோம்- நடிகர் விவேக் மறைவுக்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் இரங்கல்!

 

தயாகத்தில் ஒரு தமிழர் வாழும் வரைக்கும் உலகத்தில் தமிழ் அழியாமல் பாதுகாக்கப்படும் என உரைத்த உத்தமனை இழந்தோம் என தென்னிந்திய திரைப்பட நடிகர் விவேக்கின் மறைவினையோட்டி காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி .ஜெயசிறில் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்

தமிழர்களுடைய மன மகிழ்ச்சிக்காகவும் தமிழ் மொழியை சிறந்த மொழி எனவும் தமிழர்கள் தமிழ் பேசுவது முன்னுரிமை என்றும் உங்களுடைய நடிப்பின் ஊடாக வெளிப்படுத்தி இருந்தீர்கள் பிறந்தவர் இறந்தே ஆகவேண்டும் இதுதான் உலக நீதியாகும் பிறப்பு நிச்சயிக்கப் படவில்லை இறப்பு நிச்சயிக்கப் பட்டிருக்கின்றது இலங்கையில் தாயகத்தில் தமிழ் மொழியை சிறப்பாக பேசுகின்றவர்கள் மட்டக்களப்பு தமிழர்கள் என்று மட்டக்களப்பிலே ஒரு நிகழ்வில் பேசிஉறுதிப் படுத்தி இருந்தீர்கள் அவ்வாறான உணர்வாளனை இழந்திருக்கின்றோம் உங்களுடைய ஆத்மா சாந்தியடைய தாயகம் சார்பாக பிராத்திக்கின்றேன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்