யாழில் நால்வர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சியில் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை, யாழ்ப்பாணம்- இளவாலை காவல்துறை பிரிவில் இருவரும் கோப்பாய் மற்றும் பலாலி காவல்துறை பிரிவுகளில் தலா ஒருவரும் இவ்வாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.

அண்மையில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே நால்வரும் கைது செய்யப்பட்டுதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.