நாவலனின் ஏற்பாட்டில் தீவகத்தில் பல உதவித்திட்டங்கள் முன்னெடுப்பு

புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தினை சேர்ந்த திரு .திருமதி சிவராஜா கேசவராணி தம்பதிகளின் நிதியுதவியில் அமரர் மயில்வாகனம் சுந்தரம்பிள்ளை அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவுதினத்தினை முன்னிட்டு
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளரும்  வேலணை பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் 15000 ரூபாய்  பெறுமதிமிக்க வாழைமரங்கள்  மண்கும்பானில் பொதுமக்களுக்கு  வழங்கிவைக்கப்பட்டன .
அத்தோடு  புங்குடுதீவிலுள்ள சில பாடசாலைகளுக்கு 300 “அறிந்திரன் ” சிறுவர் சஞ்சிகைகள் வழங்கிவைக்கப்பட்டன .
வேலணை பிரதேச சபை உறுப்பினர் திரு .செல்லப்பா பார்த்தீபன் , தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்  பிரமுகர் கருணாகரன் குணாளன்  ஆகியோரும்  இச்செயற்பாடுகளில் கலந்துகொண்டிருந்தனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்