மட்டக்களப்பில் செவிப்புலன் வலுவற்ற பெண்களின் ஆளுமை வெளிப்படுத்தலும்  பெண்களின் பாதுகாப்பு தொடர்பான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு !

செவிப்புலன் வலுவற்ற பெண்களின் ஆளுமை வெளிப்படுத்தலும்  பெண்களின் பாதுகாப்பு தொடர்பான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு  மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் தன்னார்வ  தொண்டு நிறுவனமான  அருவி பெண்கள்   வலையமைப்பானது   மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 பிரதேச  செயலக பிரிவுகளில் சமூக மேம்பாட்டுக்கான  உட்கட்டமைப்பு  அபிவிருத்தி, மாணவர்களுக்கான  கல்வி, சுகாதாரம், குடிநீர், சமூக பாதுகாப்பு  போன்ற  பல்வேறு  அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன் இணைத்து முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள செவிப்புலன் வலுவற்றோர்களில்  பெண்களின் ஆளுமை  வெளிப்படுத்தும் வகையில்   பெண்களின் பாதுகாப்பு , அவற்றுக்கான அணுகுமுறைகள் , அதனை வெளிப்படுத்தல் போன்றவற்றுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் அருவி பெண்கள்   வலையமைப்பு புதிய செயல்த்திட்டத்தினை இன்று ஆரம்பித்து வைத்துள்ளது.
அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு மட்டக்களப்பு தன்னாமுனை மியாமி மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் மாவட்ட பணிப்பாளரும் சட்டத்தரணியுமான திருமதி.மயூரி ஜனன் தலைமையில்   நடைபெற்ற  நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன்,  மற்றும்  சிறப்பு விருந்தினர்களாக  பிரதேச  செயலாளர்களான, ராஜ் பாபு, திருமதி.நவசிவாயம் சத்தியானந்தி  ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் அருவி பெண்கள் வலையமைப்பின் குழு உறுப்பினர்கள், மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தின் அங்கத்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.