ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

பெண்களை இழிவாக பேசியதாக தெரிவித்தும் இராஜாங்க அமைச்சர்  ஜீவன் தொண்டமான் பகிரங்கமாக மன்னிப்புக்கோர  வேண்டும் எனக் கோரியும்  `ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் மல்லியப்பு சந்தியில்  மகளிர் அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அண்மையில் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தாக்கி பேசிய சமயம் பெண்களை  இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை பரிமாறியதாக அவர் மீது பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன

இந்நிலையில் பல்வேறு மலையக அமைப்புகள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன் சமூக வலைத்தளங்களிலும் இவ் விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது.

இதனால் ஜீவன் தொண்டமான்   மலையக பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு  கேட்க வேண்டும் எனக் கோரியே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

j3

 

 

 

இதேவேளை அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்