நடிகர் விவேக் நினைவாக யாழ்.இணுவில் இளைஞர்களால் மரநடுகை திட்டம்!

மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணம் இணுவில் இளைஞர்களால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.

ஒரு கோடி மரம் நடுகை செயற்திட்டத்தை நடிகர் விவேக் முன்னெடுத்து வந்திருந்தார். அந்நிலையில் , கடந்த சனிக்கிழமை அவர் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பலர் மரநடுகை செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் வரதராஜா தனகோபியின் ஏற்பாட்டில் இணுவில் இளைஞர்கள் மரநடுகையில் ஈடுபட்டனர்.

அதேவேளை “யாழ்ப்பாண ஜாகுவார்ஸ் ” எனும் அமைப்பொன்றினை உருவாக்கி அதில் தன்னார்வமுடைய இளையோரை இணைத்து மரநடுகை செயற்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் , அதில் ஆர்வமுள்ள இளையோர் இணைந்து கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.