ஏப்ரல் 27 முதல் அனைத்து பல்கலைக்கழகங்களும் மீள் திறப்பு

எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைக்காக திறக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களின் அடிப்படையில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் இரண்டாம் தவணைக்காக ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் பாடசாலைகளுக்கான விடுமுறையை ஒரு வார காலமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்