கிளிநொச்சி பூநகரியில் கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி, பூநகரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடா பகுதியில் 286.521 கிலோ கிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இராணுவத்தினரும் கிளிநொச்சி காவல்துறை விசேட அதிரடிப் படையினரும் இணைந்து இன்று (20.04.2021) அதிகாலை 03.00 மணி அளவில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்கரை அண்மித்த பள்ளிக்குடா காட்டுப் பகுதியில் 286.521 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இது தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை. மீட்கப்பட்ட கஞ்சா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்