சிறி லங்கா சுதந்திர கட்சி தனியாக மே தினத்தை கொண்டாட தீர்மானித்துள்ளது

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனியாக மே தினத்தை கொண்டாட தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறுகையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு மற்றும் பாராளுமன்றக் குழு ஆகியவை மே தின கொண்டாட்டங்களை கொழும்பில் நடத்துவது பொருத்தமானது என்று தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

“குறிப்பாக எங்கள் கட்சியின் வரலாற்றை எடுத்துக் கொண்டால், உழைக்கும் மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு சிறிய மனிதரின் முதன்மையான உரிமைகள் மற்றும் சலுகைகளை பெற்றுக் கொடுத்தது ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியாகும். எனவே, மே தினத்தை வெற்றிகரமாக கொண்டாட எதிர்ப்பார்த்துள்ளோம்.. என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்