மட்டு சீயோன் தேவாலயத்திற்கு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் காவிந்த ஜயவர்தனா, ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் விஜயம்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலின் நாளை 21 ம் திகதி இரண்டாவது ஆண்டு தினத்தையிட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் காவிந்த ஜயவர்தனா, ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை (20) விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலால் 31 பேர் உயிரிழந்ததுடன் 70 மேற்பட்டோர் படுகாயமடைந்ததுடன் கட்டிடம் பலத்த சேதமடைந்தது. இந்த தேவாலயத்தின் புனர்நிர்மானப்பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டுவந்தனர் இருந்தபோதும் கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் இருந்து இராணுவத்தினர் புனர்நிர்மானப் பணிகளை இடைநடுவில் கைவிட்டுவிட்டு வெளியேறினர்.

குறித்த தேவாயம் குண்டுதாக்குதல் இடம்பெற்று நாளை 21 ம் திகதி இரண்டு வருடங்களாகியும் புனர்நிர்மானப்பணிகள் பூர்த்தி செய்யப்படாமல் இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த தேவாலயத்திற்கு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் கவிந்த ஜயவர்தனா, ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டு தேவலாயத்தை பார்வையிட்டு பின்னர் அங்கு உயிரிழந்தவர்களின் நிழல் படங்களின் முன் மெழுகுவர்த்தி ஏற்று அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து தேவாலய பிரதம போதகர் மகேசன் ரோசான் போதகருடன் கலந்துரையாடியதுடன் இந்த உயிர்த்தஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான ஏனைய தேவலாயங்கள் நிர்மானிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தேவாலயம் மட்டும் புனர்நிர்மாண பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளமை தொடர்பாக நாடாளுமன்றத்தன் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்