பருத்தித்துறையில் வாள்வெட்டு – ஒருவர் பலி நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்வாய் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இரண்டு தரப்புக்கு இடையில் ஏற்பட்ட முறுகலே வாள்வெட்டில் முடிந்ததாக தெரியவருகிறது.

படுகாயம் அடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யவதற்கான நடவடிக்கைளையும் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்