யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 643 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பாரதிபுரம் கிராமத்தில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.