ஐ.ம.சக்தியினர் கறுப்பு உடையில் இரு நிமிட மெளன அஞ்சலி!

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கத்தோலிக்க தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

தாக்குதலில் பலியானவர்களின் நினைவாக இன்று காலை 8.45 மணியளவில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கறுப்பு உடை அணிந்து இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்