உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டாவது வருடம்;வவுனியா அந்தோனியார் தேவாலயத்தில் விஷேட பிரார்த்தனை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டாவது வருடம். அத்தாக்குதலில் பலியான மக்களை நினைவு கூர்ந்து அதற்கான விஷேட பிரார்த்தனை இன்று வவுனியா அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
2019 ம் ஆண்டு எப்ரல் மாதம் 21ம் திகதி கொழும்பு பிரபல விடுதிகளிலும், தேவாலயம் மீதும் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் இரண்டு வருடம். அத்தாக்குதலில் பலியான மக்களை நினைவுகூர்ந்து, இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும் வவுனியா அந்தோனியார் தேவாலயத்தில் அருட்தந்தை ஜெயபாலன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி விஷேட வழிபாடு இன்று அதிகாலை இடம் பெற்றிருந்தது.
குறித்த தேவாலயத்தில் பொலிஸ், இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புடன் வழிபாடுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்