மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் பலி மற்றுமொருவர் படுகாயம்

(மண்டூர் ஷமி)
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒருவர் படுகாயம் மற்றுமொருவர் பலியான சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் தனது வயல் வேலையினை முடித்துவிட்டு தனது வயலுக்குள் தெளிப்பதற்கு கிருமிநாசினி வாங்கச்சென்ற போது (64) வதுடைய கந்தையா-நடராசா என்பவர் மண்டூர் பிரதான வீதியில் வீதியினை குறுக்கிட்ட மாட்டில் மோதியதில் படுகாயம் அடைந்த நிலையில் மண்டூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (21) உயிரிழந்துள்ளர்.

அதே தினத்தில் வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் தனது அலுவலக கடமையினை முடித்துவிட்டு தனது வீடு திரும்பிய பெண் ஒருவர் வீதியினை குறுகிட்ட பாம்பினை கண்டு தனது மோட்டார் சைக்கிளை மறு திசையில் திருப்பியபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்த நிலையில் மண்டூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிளை-தவக்குமார். சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசங்களில் அதிகமான கட்டக்காலி மாடுகள் வீதியில் இரவுவேளைகளில் நடமாடுவதால் அதிகமான விபத்துக்களில் பல உயிர்களை இழக்க நேரிடுகின்றது.எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயம் பற்றி உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக பிரதேச வாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்