பல்கலைக்கழகங்களை மேலும் 2 வாரங்கள் கழித்து திறப்பதற்கு தீர்மானம்-கல்வியமைச்சர்

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பல்கலைக்கழகங்களை மேலும் 2 வாரங்கள் கழித்து திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 27 ஆம்திகதிதிறக்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்கலைக்கழகங்களை மேலும் 2 வாரங்கள் கழித்து திறப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்