கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக கமலநாதன் விஜிந்தன் தெரிவு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தலைவர் தெரிவு இன்று(22) இடம்பெற்ற நிலையில் புதிய தவிசாளர் பதவியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான கமலநாதன் விஜிந்தன் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் நிறஞ்சன் தலைமையில் இடம்பெற்ற அமர்வில் 22 உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர் .

இரண்டு உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்காத நிலையில் 22 உறுப்பினர்களில் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் இருவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் ஆக மூன்று பேர் நடுநிலை வகித்த நிலையில் 19 பேர் வாக்குகளை பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த ஒருவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த ஒருவருமாக 4 பேர் பொது ஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அன்ரனி ரங்க துசார அவர்களுக்கு வாக்களித்த நிலையில் ஏனைய கட்சிகளைச் சார்ந்த 15 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கமலநாதன் விஜிந்தன் அவர்களுக்கு வாக்களித்து இருந்த நிலையில் 15 வாக்குகளை பெற்று கரைதுறைப்பற்று பிரதேச சபையனுடைய புதிய தவிசாளராக கமலநாதன் விஜிந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

received 2940908646196928

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்