பாராளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மை குறித்து ஆராய 7 பேரைக் கொண்ட குழு

பாராளுமன்றத்தில் நேற்று (21) ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரணை செய்ய, சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதென, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்களின் செயற்பாடு குறித்து கவலையடைவதாகத் தெரிவித்துள்ள அவர், விசாரணைகளின் பின்னர் அது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்