வவுனியாவில் குடும்ப பெண் ஒருவர் கைது

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் கஞ்சா போதைப் பொருளுடன் பெண் ஒருவரை பொலிசார் நேற்று (21.04) மாலை கைது செய்துள்ளனர்.

வவுனியா போதை ஒழிப்பு பிரிவுப் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து உக்கிளாங்குளம் – கூமாங்குளம் வீதியில் முனியப்பர் கோவிலடிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடத்திய போது மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த கஞ்சாப் போதைப் பொருள் கைப்பற்றிய பொலிசார் அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில், குடும்ப பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார், விசாரணைகளின் குறித்த பெண்ணை  நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்