சிறுவர்களின் ஆங்கில மொழி அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் ஏ.ஆர்.மன்சூர் பௌன்டேசனின் “ஆங்கில சொற்திறன்’போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரல் !

(எம்.என்.எம்.அப்ராஸ்)

சிறுவர்களின் ஆங்கில மொழி அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் ‘Spelling Bee’எனும் ஆங்கில சொற்திறன் போட்டியை ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேசன்அம்பாறை மாவட்ட ரீதியில் நடாத்த திட்டமிட்டுள்ளது.

இது  சிறுவர்களின் ஆங்கில மொழிச் சொற்களின் எழுத்துவரி (spelling), மொழி,இலக்கணம்,
உச்சரிப்பு (Phonetic), பிரயோகம் ஆகியவற்றை நேர்த்தியாக உபயோகிப்பதை ஊக்கப்படுத்தும் நோக்கில் நடத்தும் போட்டியாகும்.

இவ் போட்டியில் கனிஷ்ட பிரிவில் 10-12 வயதுடைவர்களும்,
சிரேஷ்ட பிரிவில் 13-15 வயதுடைவர்களும் கலந்து கொள்ள முடியும் என்பதுடன்,

போட்டியின் விண்ணப்ப நிபந்தனைகளாக அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும் ,ஒரு குடும்பத்தில் ஒருவர் மாத்திரமே விண்ணப்பிக்கலாம்,
உங்கள் விண்ணப்படிவத்துடன்  பிறப்புச் சான்றிதழ் (birth certificate) பிரதி ஒன்றையும் இணைத்து அனுப்பி வைக்க  வேண்டும்,விண்ணப்பப்படிவத்தினை “ARMF  169/10/B/1 ,மாதவன் வீதி,கல்முனை-03” எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் அல்லது விண்ணப்பப்படிவங்களை A.R.Munsoor Foundation எனும் எங்கள் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக அல்லது 077 44 330 44 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்வதின் ஊடாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் குறித்த போட்டியில் பங்கேற்க விரும்புவோர் இம் மாதம் 30ம் திகதிக்கு முன்னர்  அனுப்பி வைக்கப்படும்  விண்ணப்பங்கள் மாத்திரமேஏற்றுக்கொள்ளப்படுவதுடன், போட்டியில்வெற்றியிட்டுவோருக்கு பண பரிசாக1ம் இடம் பெறுவோருக்கு 30,000 ரூபாவும்,2ம் இடம் பெறுவோருக்கு 20,000 ரூபாவும், 3ம் இடம் பெறுவோருக்கு  10,000ரூபாவும் ,மற்றும்இன்னும் பல ஆறுதல் பரிசுகள்மற்றும் ஒவ்வொரு சுற்றுக்களிலும் வெற்றியீட்டுபவர்களுக்கு  சான்றிதழ்கள் வழங்கப்படவும் உள்ளது என ஏ.ஆர்.மன்சூர் பௌன்டேசன் அமைப்பினர் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்