கிழக்கின் முதல் மருத்துவ பேராசிரியராக பட்டம் பெற்ற உமாகாந்தன் கௌரவிப்பு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் முதல் மருத்துவ பேராசிரியராக பட்டம்பெற்ற வைத்திய பேராசிரியர் மகேசன் உமாகாந்தனை வைத்தியர்கள் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (22) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தலைமையல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.அச்சுதன், மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலை பணிப்பாளர்களான, வைத்தியர்.எம்.எஸ்.எம். ஜாபீர், வைத்தியர் புவநேந்திரநாதன், வைத்தியர் எரங்கராஜபக்ஷ, வைத்தியர் திருமதி ரி. சசிகலா, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச சுகாதார பணிப்பாளர்களான வைத்தியர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார வைத்தியசாலை பணிப்பாளர்கள் கலந்து கொண்டு அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுக் கேடயம் வழங்கி கௌரவித்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்