1,263 கிலோ மஞ்சள் பறிமுதல்..

வடமேற்கு மற்றும் மேற்கு கடற்பரப்பினூடாக இம்மாதம் 17ம் திகதி முதல் 20ம் திகதி வரை நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1,263 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதற்கமைய மன்னார், வங்காலை மற்றும் நுரைச்சோலை, தலுவ கடற்கரை பிராந்தியங்களில் இடம்பெற்ற இருவேறு சம்பவங்களின் போது 14 சாக்கு பொதிகளில் பொதியிடப்பட்ட 807 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டன.

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்