வவுனியா பூந்தோட்டம் பகுதியில் குடைசாந்த பாரவூர்தி

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் குடைசாந்த பாரவூர்தி : 3 மணிநேரமாக போக்குவரத்து ஸ்தம்பிதம்

வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் பாரவூர்தியொன்று வீதியினை வீட்டு விலகி குடைசாந்தமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து 3 மணிநேரமாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த வீதியில் வயல் வெளியினை அண்மித்த பகுதியில் பாலம் நிர்மாண பணிகளுக்காக வீதியின் ஒர் பகுதியூடாக மாத்திரமே போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இன்றையதினம் (24.04) பொருட்களை ஏற்றிய பாரவூர்தியொன்று பூந்தோட்டம் பிரதான வீதியுடாக பூந்தோட்டம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் பாலம் நிர்மானபணி இடம்பெற்று வருகின்ற பகுதியின் மறுபக்கத்தில் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் பாரவூர்தியின் ஒர் பகுதி வீதியினை விட்டு கீழிறங்கி குடைசாந்துள்ளது.

இதன் காரணமாக வவுனியா – பூந்தோட்டம் வீதியூடான போக்குவரத்து சுமார் 3 மணிநேரமாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் பொதுமக்கள் மாற்று பாதையூடான பயணத்தினை தொடர்ந்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்